'ரொம்ப ஓவரா இருக்கு உக்காரு'... என்ன பண்ணி வச்சிருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பேசிய தளபதி விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பற்றி சில இரகசியங்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை கூறினார்.

தளபதி டயலாக்கை டிரெண்ட் ஆக்கிய இயக்குநர் லோகேஷ் | Director tweet vijay Dialogue

லோகேஷுக்கு சீன் பேப்பர் பயன்படுத்தும் பழக்கமே இல்லை. லோகேஷ் பிளான் மட்டும் பண்றதில்ல, மாஸ்டர் பிளானும் சேர்த்து பண்ணுகிறார். அது தான் அவரின் வெற்றிக்கு காரணம். பாட்டில் வருவது போன்று தான் ஹார்டு வொர்க்கும், ஸ்மார்ட் வொர்க்கும் சேர்ந்து பண்ணீங்கன்னா சீக்கிரமாகவே ஜெயிக்கலாம் என்பதற்கு லோகேஷ் ஒரு எடுத்துக்காட்டு.

இவருடைய இந்த பிளான் எனக்கு புதிதாக இருந்ததால் நான் வெறியாகி, மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றார் விஜய். அதை கேட்ட லோகேஷ் எழுந்து நிற்க ரொம்ப ஓவரா இருக்கு, உட்காரு என்று விஜய் கூறினார். ஆனால் விஜய் சொன்ன அந்த டயலாக்கையே லோகேஷ்  தனது ட்விட்டரில் வெளியிட்டு ஸ்மார்ட் வொர்க் செய்துள்ளார். உண்மையில் நீங்க பெரிய ஆள் தான் பாஸ்.

Entertainment sub editor