சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படத்தில் உள்ள பாடல் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அபர்னா பாலமுரளி கதாநாயகியாகவும், மோகன் பாபு, கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். விமான சேவை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் உள்ள பாடல் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ், சூரரைப் போற்று படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். ராக் இசையில் இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் சூரரைப் போற்று படத்தில் இருந்து வெளியான வெய்யோன்சில்லி, மண்ணுருண்ட உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
📢 : In #SooraraiPottru Govind and the other lead singer Christin from Most Popular South Indian Band @thaikudambridge From Kerala have sung together for a ROCK number 🔥...
Lyrics by @Arunrajakamaraj ...😍 #SudhaKongara @Suriya_offl @gvprakash @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/g7zPJnxMeV
— Suriya Fanaticos™ (@SuriyaFanaticos) March 17, 2020