www.garudabazaar.com

பிரபல நடிகையுடன் "8 தோட்டாக்கள்" இயக்குனர் திருமணம் .. வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் இயக்குனர் ‍ ஶ்ரீ கணேஷ், பிரபல நடிகையை திருமணம் செய்துள்ளார்.

Director Sri Ganesh Actress Suhasini Marriage Photos

Also Read | சோஷியில் மீடியாவில் இருந்து வெளியேறிய ராஷி கண்ணா.. அவரே வெளியிட்ட பரபர அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்து பின் சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார் ஸ்ரீ கணேஷ். 

Director Sri Ganesh Actress Suhasini Marriage Photos

இந்த படத்தில் கபடி வீரராகவும், நடிகர் அஜித்தின் ரசிகராகவும் அதர்வா நடித்தார். நடிகை பிரியா பவானி சங்கர் பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் - 5 ஆம் தேதி ரிலீசானது.

இந்நிலையில் இயக்குனர் ஶ்ரீ கணேஷ், பிரபல நடிகை சுஹாசினி சஞ்சீவை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Director Sri Ganesh Actress Suhasini Marriage Photos

சுஹாசினி சஞ்சீவ், தமிழ் சினிமாவில் நெஞ்சுக்கு நீதி, வனம், சர்பத், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also Read | OFFICIAL: தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. பட ரிலீஸ் எப்போ? போஸ்டருடன் வெளியான அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Director Sri Ganesh Actress Suhasini Marriage Photos

People looking for online information on Sri Ganesh, Suhasini, Suhasini Marriage Photo will find this news story useful.