www.garudabazaar.com

"பாத்துக்கலாம்.. கிடைக்குறது கிடைக்காம இருக்காது".. கமல், ரஜினி பஞ்ச்'களை பேசிய ஜெயம் ரவி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ponniyin Selvan Jayam Ravi about Rajini Kamal Maniratnam

Also Read | PS1: “Bro-னு கூப்பிட கஷ்டமா இருந்துச்சு” - விக்ரம் & ஜெயம் ரவியுடன் நடித்தது குறித்து த்ரிஷா.!

இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Ponniyin Selvan Jayam Ravi about Rajini Kamal Maniratnam

இதில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, “இப்படத்தினை பற்றி எல்லோரும் நன்றாக பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை, பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது. இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்னம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை.

Ponniyin Selvan Jayam Ravi about Rajini Kamal Maniratnam

பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது.. என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது. மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Ponniyin Selvan Jayam Ravi about Rajini Kamal Maniratnam

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால்,  ‘அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள்’ என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு Mood கிரியேட் ஆச்சு. அப்படியே வீட்டுக்கு  சென்றேன். எப்போதும் ஆதே Mood-ல் இருந்தேன். இதனால் வீட்டில் திட்டு கூட வாங்கினேன். அது வேறு வழி இல்லை. ஆறு மாதத்தில் அதே Mood-ல் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம். மிக்க நன்றி சார்.

கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டியவர் மனதார வேண்டிக் கொள்கிறேன். விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி” என்றார்..

Also Read | "எப்படி நடிச்சும் மணி சார் ஓகே சொல்லல.. அப்றம்.." - தளபதியில் ரஜினிக்கு கமல் சொன்ன செம டிப்ஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Jayam Ravi about Rajini Kamal Maniratnam

People looking for online information on Jayam Ravi, Ponniyin Selvan, Ponniyin Selvan Audio and Trailer Launch, Ponniyin Selvan Audio Launch will find this news story useful.