ரகுமான் முதல் ரஜினி வரை.. மணிரத்னம் கிட்ட இருந்து ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..? இதோ ஒரு வாய்ப்பு..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செம பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன், தளபதி உள்ளிட்ட படங்கள் ஆல் டைம் க்ளாசிக்காக கொண்டாடுப்படுகின்றது. அண்மையில் இவர் இயக்கிய செக்க சிவந்த வானம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இவர் தற்போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோரை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகையும் மணிரத்னமின் மனைவியுமான சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''கடந்த 4 தசாப்தங்களாக அவர் படங்களை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இப்போது உங்களை அவர் பார்க்கும் நேரம். உங்களை பற்றிய அறிமுகத்தோடு, உங்கள் கேள்வியையும் 25 நோடிகளுக்குள் வீடியோ எடுத்து, 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். மணிரத்னம் அவர்கள் வீடியோக்களை பார்த்து, அந்தந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார்'' என அவர் தெரிவித்துள்ளார்.
அப்புறம் என்ன.. கேள்வியை முடிவு பண்ணிட்டு, கேமராவை ஆன் பண்ண வேண்டியது தானே.!