மீண்டும் இணையும் பியார் ப்ரேமா காதல் கூட்டணி.! - செம ட்ரீட் கொடுக்க யுவன் ரெடி.!!
முகப்பு > சினிமா செய்திகள்இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பியார் ப்ரேமா காதல் இயக்குநர் இளனின் கேள்விக்கு செம பதில் கொடுத்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பியார் ப்ரேமா காதல். இத்திரைப்படத்தை இயக்குநர் இளன் இயக்கினார். ஹரிஷ் கல்யாண், ரைசா உள்ளிட்டோர் நடித்த இந்த காதல் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் பியார் ப்ரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யுவனை டேக் செய்து, 'உங்களை வைத்து மீண்டும் ஒரு பாடல் ஷூட் செய்யலாம் என நினைக்கிறேன். கொஞ்சம் தேதிகள் கொடுங்கள்' என கேட்டார். இதற்கு பதிலளித்த யுவன், 'ஊரடங்கிற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் சரி, நான் ரெடி' என பதிலளித்துள்ளார். இதையடுத்து ஊரடங்கு முடிந்த பிறகு இருவரின் கூட்டணியில் ரசிகர்களுக்கு விருந்தாக ஒரு பாடல் வருவதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர்.