15 வருஷத்துக்கு பிறகு.. இப்படி யாருக்கு நடக்கும்..! விஜய்யின் திருப்பாச்சி.. பேரரசு நெகிழ்ச்சி.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் திருப்பாச்சி குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. பேரரசு இயக்கிய இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து இதே கூட்டணியில் சிவகாசி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களை பேரரசு இயக்கினார்.
இந்நிலையில் இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''நேற்று சன் TV யில் திருப்பாச்சி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது! நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனதுபோல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள் . பாராட்டிய அனைவருக்கும் நன்றி.'' 15 வருடங்களுக்கு பிறகும் இத்திரைப்படத்தை இன்றும் மக்கள் கொண்டாடுவது பேரரசுவின் பதிவின் மூலம் தெரிகிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நேற்று சன் TV யில் திருப்பாச்சி திரைப்படம்
ஒளிபரப்பப்பட்டது!
நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனதுபோல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள் . பாராட்டிய அனைவருக்கும் நன்றி pic.twitter.com/HXGNKRbUZD
— PERARASU ARASU (@ARASUPERARASU) April 6, 2020