இந்த கடினமான நேரத்தில் அரசுக்கு தோள் கொடுக்கும் விஜயகாந்த்.! செம அறிவிப்பை வெளியிட்டார்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜயகாந்த் கொரோனா நேரத்தில் அரசுக்கு உதவும் வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பிரபலங்கள் தொடங்கி பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த், அரசுக்கு உதவ முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க , காஞ்சிபுரம் மாவட்டம் - ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னை - தேமுதிக தலைமை கழகத்தையும் பயன்படுத்தி கொள்ள தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். மேலும் தனது கழக நிர்வாகிகள் அனைவரும், மக்களுக்கு முடிந்த வரை உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க , காஞ்சிபுரம் மாவட்டம் - ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, சென்னை - தேமுதிக தலைமை கழகத்தை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.@CMOTamilNadu | #CODVID19 pic.twitter.com/dif9N1q7Fa
— Vijayakant (@iVijayakant) April 6, 2020