'நாம இணைந்து 43,823 மணி நேரங்கள் ஆகிறது.....'' - தன் மனைவி பிரியா குறித்து அட்லி ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து 'தெறி', 'மெர்சல்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

Director Atlee tweet about Priya for Wedding Anniversary

தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து அட்லி , பாலிவுட் ஷாருக்கானின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் அட்லி கடந்த 2014 ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்துகொண்டார்.  இந்நிலையில் நேற்றைய தினம் அவர்கள் திருமண தினம் என்பதால் அட்லி தனது மனைவி குறித்து ட்விட்டர் பதிவை எழுதியுள்ளார்.

அதில், திருமண நாள் வாழ்த்துகள். நாம் இணைந்து தற்போது 43,823 மணி நேரங்கள் ஆகிறது. நீண்ட நாட்களை உன்னுடன் இணைந்து கழிக்க வேண்டும். லவ்யூ பாப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.