www.garudabazaar.com

Breaking : மிஷ்கினின் அடுத்தப்படம் என்ன தெரியுமா..?! - அந்த சூப்பர் ஹிட் படத்தின் செகன்ட் பார்ட் இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

மிஷ்கினின் அடுத்தப்படம் | Director Mysskins next film exclusive details

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் மேக்கிங்கால் இவர் பிரபலமடைந்தார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.

மிஷ்கினின் அடுத்தப்படம் | Director Mysskins next film exclusive details

இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்து செம தகவல் தெரிய வந்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படம் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாகவும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags : Mysskin, Pisasu

தொடர்புடைய செய்திகள்

மிஷ்கினின் அடுத்தப்படம் | Director Mysskins next film exclusive details

People looking for online information on Mysskin, Pisasu will find this news story useful.