'துப்பறிவாளன் 2' விவகாரம் குறித்து விஷால் - இயக்குநரின் தவறுகளை சுட்டிக்காட்டினால் தப்பா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சைக்கோ' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் மிஷ்கின், விஷால் ஹீரோவாக நடிக்க, 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்றும் இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

துப்பறிவாளன் 2 மற்றும் மிஷ்கின் குறித்து விஷால் அறிக்கை | Vishal Shares a statement about Mysskin and Thupparivaalan 2

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில காரணங்களால் இயக்குநர் மிஷ்கின் விலகுவதாகவும், படத்தை தொடர்ந்து விஷால் இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர்,  படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர்  சுட்டிக்காட்டினால் அது தவறா?  UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா?

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை. திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor