www.garudabazaar.com

விஜய் நடிப்பில் வேலாயுதம் 2 -ஆ..?.. பட இயக்குனர் வெளியிட்ட சர்ப்ரைஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

Director Mohan Raja opens about Velayutham Movie Part 2

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஜெயம் ரவி நடிப்பில் 'தனி ஒருவன் - 2' எப்போ? அனல் பறக்கும் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Director Mohan Raja opens about Velayutham Movie Part 2

Images are subject to © copyright to their respective owners.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Director Mohan Raja opens about Velayutham Movie Part 2

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் வேலாயுதம். சூப்பர் ஹீரோ படமாக வெளிவந்த இந்த படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். விஜய் ஆண்டனி இசையில் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி நடித்தனர். 

Director Mohan Raja opens about Velayutham Movie Part 2

Images are subject to © copyright to their respective owners.

இச்சூழலில் இயக்குனர் மோகன் ராஜா, சொப்பன சுந்தரி படத்தின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் "வேலாயுதம்-2, தனி ஒருவன்-2 படத்தின் இரண்டாம் பாகம் வருமா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோகன் ராஜா, "கண்டிப்பா உண்டு, இந்த வருடம் கிடையாது. அடுத்த வருடம்" என பதில் அளித்து விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Also Read | "எதிரிகளை மிதிச்சு ஏறிவந்தவன்".. மணல் மாஃபியாவாக சிம்பு.. அனல் பறக்கும் 'பத்து தல' டீஸர்!

விஜய் நடிப்பில் வேலாயுதம் 2 -ஆ..?.. பட இயக்குனர் வெளியிட்ட சர்ப்ரைஸ் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Director Mohan Raja opens about Velayutham Movie Part 2

People looking for online information on Mohan Raja, Velayutham, Velayutham Movie will find this news story useful.