www.garudabazaar.com

ஹரிஷ் கல்யாண் & அட்டகத்தி தினேஷின் புதிய படம்.. இயக்குநர் இவரா? டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : பிக்பாஸ் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Harish Kalyaan Vadhanthi Sanjana Krishnamoorty joins new film

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Chandramukhi 2 : மேக்கப் போட்டு தயாராகும் சந்திரமுகி 2 ..? கங்கனாவின் Viral BTS ஃபோட்டோ .. சம்பவம் இருக்கு..

ஹரிஷ் கல்யாண்

இயக்குனர் சாமி இயக்கிய சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஹரிஷ் கல்யாண். ஆனால் அவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன்தான். அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

Harish Kalyaan Vadhanthi Sanjana Krishnamoorty joins new film

Images are subject to © copyright to their respective owners.

டீசல்

இதனிடையே நடிகர் ஹரிஷ் நடிக்கும் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியானது. டீசல் என்ற தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரில், பெட்ரோல் பங்கில் கையில் டீசல் பம்புடன் நிற்கும் தோற்றத்தில் காணப்பட்டார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த படத்தில் அவரோடு அதுல்யா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் நடித்த அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக எம் எஸ் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். கனா, நெஞ்சுக்கு நீதி மற்றும் பேச்சிலர் படங்களின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

அட்டகத்தி தினேஷ் 

நடிகர் அட்டகத்தி தினேஷ், அட்டகத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் குக்கூ படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், கபாலி, உள்குத்து, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது தண்டகாரண்யம் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

Harish Kalyaan Vadhanthi Sanjana Krishnamoorty joins new film

Images are subject to © copyright to their respective owners.

லப்பர் பந்து

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக லப்பர் பந்து எனும் படத்தில் நடிக்கிறார்கள்.  சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸ் புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

Harish Kalyaan Vadhanthi Sanjana Krishnamoorty joins new film

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது. இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.

Also Read | அப்போ ரோஜா ஸ்ரீ.. இப்போ பூஜா.. பாட்டு, டயலாக்னு அமர்க்களம் பண்ணும் DJ பிளாக் | super singer 9

Harish Kalyaan Vadhanthi Sanjana Krishnamoorty joins new film

People looking for online information on Harish Kalyaan, Lubber pandhu, Prince Pictures, Sanjana Krishnamoorty, Tamilarasan Pachamuthu, Vadhanthi will find this news story useful.