Rocketry
www.garudabazaar.com

மோகன் லாலின் 'லூசிபர்' படத்தின் ரீமேக்.. முதல் லுக் போஸ்டர் எப்போ ரிலீஸ்? தெறியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'

First look of Mohan Raja Godfather starring Chiranjeevi will be out on July 4

Also Read | இந்த ஜூலை முதல் வாரம்.. OTT-யில் வெளியாகும் சூப்பர் திரைப்படங்கள்.. முழு தகவல்

இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார்.  மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தை முதலில் சாஹு படத்தின் இயக்குனரான சுஜித் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு வேலைக்காரன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இப்படத்தினை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது.

காட்ஃபாதர் படத்தில் பிரித்வி ராஜ் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடித்துள்ளார்.  காட்ஃபாதர் படம் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பூரி ஜெகநாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சத்யா தேவும் முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

First look of Mohan Raja Godfather starring Chiranjeevi will be out on July 4

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவித்துள்ளது.

வலிமை படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கேமராவைக் கையாளுகிறார், இசையமைப்பாளர் எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். பல பாலிவுட் ப்ளாக்பஸ்டர் படங்களின் கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இந்தப் படத்தின் கலைப் பணிகளை கவனித்து வருகிறார்.

இப்படத்தை ஆர்பி சவுத்ரி மற்றும் என்வி பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர், கொனிடேலா சுரேகா இதனை வழங்குகிறார்.

Also Read | பட ரிலீஸை ஒட்டி போட்டோ ஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

First look of Mohan Raja Godfather starring Chiranjeevi will be out on July 4

People looking for online information on Chiranjeevi, First look of Mohan Raja Godfather, Godfather Movie, Mohan Raja will find this news story useful.