பா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' படத்துக்கு பிரபல இயக்குநர் விமர்சனம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 05, 2019 03:16 PM
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு'. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் ரித்விகா, ஜான் விஜய், லிஜீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டென்மா இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.
இந்த படம் நாளை (டிசம்பர் 6) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து ''மேற்கு தொடர்ச்சி மலை'' பட இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்
அதில், ''போரின் கோரமுகத்தையும் ஜாதிய சமூகத்தின் அவலமுகத்தையும் மிக சுவாரசியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லியிருக்கிற தோழர் அதியன் ஆதிரைக்கும் தயாரித்த தோழர் பா.ரஞ்சித்திற்கும் மற்றும் தோள் கொடுத்த குழுவினருக்கும் ஆயிரம் ஆயிரம் காகித கொக்குகளும்... அன்பு முத்தங்களும்...''என்று குறிப்பிட்டுள்ளார்.
போரின் கோரமுகத்தையும் ஜாதிய சமூகத்தின் அவலமுகத்தையும் மிக சுவாரசியமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லியிருக்கிற தோழர்@AthiraiAthiyan தயாரித்த தோழர்@beemji மற்றும் தோள் கொடுத்த குழுவினருக்கும் ஆயிரம் ஆயிரம் காகித கொக்குகளும்... அன்பு முத்தங்களும்...😘😘😘 #Gundu pic.twitter.com/BcdyRZTutM
— leninbharathi (@leninbharathi1) December 4, 2019