'எனக்கு தொடர்புலாம் கிடையாது' - ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுக்கு நடிகர் ஈஸ்வர் பதிலடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 05, 2019 02:17 PM
'வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ, தனது கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வர் மீது தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார்களை கூறியிருந்தார்.

இதனையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார். பின்னர் ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''எனக்கு Air Hostess பிரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா அவங்க சொல்ற மாதிரி யார் கூடவும் எனக்கு தொடர்புலாம் கிடையாது சார். என்னிடம் நிறைய பேர் அந்த பொண்ணு உன் கிட்ட இருந்து காசை உருவிட்டு தான் சும்மாவிடும்னு சொன்னாங்க. அப்போ எனக்கு உரைக்கல. இப்போ நான் ஒத்துக்கிறேன். நான் பண்ண ஒரே தப்பு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டது.
ஜெயஸ்ரீ யாரெல்லோமோ மிஸ் கைடு பன்றாங்க. அதுல மஹாலட்சுமியின் கணவரும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனா இது அசிங்கமா போய்ட்டு இருக்கு. ஜெயஸ்ரீயும் மஹாலட்சுமியின் கணவரும் ரிலேசன்ஷிப்ல இருக்கலாம்'' என்றார்.
அப்போது செய்தியாளர்கள் மஹாலட்சுமியின் விவகாரம் குறித்து கேட்ட போது, ''இந்த சீரியலில் இப்போ நடிக்கலையே. ஒரு வருஷமா ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். நான் ஜெயஸ்ரீயும் மஹாலட்சுமியின் கணவரும் ரிலேசன்ஷிப்ல இருக்கலாம்னு தான் சொன்னேன். இந்த தீபாவளிக்கு என் பொண்ணோட சேர்ந்து, அவங்க எல்லோரும் சேர்ந்து தண்ணீ பார்ட்டியோட பட்டாசு வெடிச்சுட்டு இருக்கிற ஃபுரூப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்ல இருக்கு.
என் பேஸ்புக்ல என்ன இருக்கு. நான் நட்சத்திர கலைவிழாவில் மஹாலட்சுமியுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு போட்டோ இருக்கு. அது விழா ஏற்பட்டாளர்கள் கேட்டுக்கொண்டதற்காக நாங்க பேஸ்புக்ல போட்டேன்'' என்றார்.
'எனக்கு தொடர்புலாம் கிடையாது' - ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுக்கு நடிகர் ஈஸ்வர் பதிலடி வீடியோ