மோடியின் உரையை பகிர்ந்த ஹெச்.ராஜா - பிரபல இயக்குநர் கமெண்ட் - ''இது நமக்கு தோன்றவில்லையே...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிவித்த  21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இன்று வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, '' நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பிக்கும் கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் , ''வரும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள். பின்னர் டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றின் மூலம் ஒளியை பரவவிடுங்கள். இதன் மூலம்  நாம் தனிமையில் இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராக 130 கோடி இந்தியர்களும் ஒன்றாகப் போராடி வருகிறோம் என்பதை நிரூபிக்கும். ஞாயிற்றுக்கிழமை விளக்குகளை ஒளிர விடும் போது உருவாகும் பிரகாசம், கொரோனா ஏற்படுத்திய இருளை விரட்டும்'' என்று தெரிவித்தார்.

இதனை வலியுறுத்தும் விதமாக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் ஜான் மகேந்திரன், ''உலக நாடுகள் வியப்பு.. இது நமக்கு தோன்றவில்லையே என்று வெட்கப்படுகிறார்கள். விஞ்ஞானிகள் அதிர்ச்சி...'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor