'மெக்கா செல்லும் பணத்தை நிதியாக கொடுத்த பாட்டி' - பிரபல ஹீரோயின் சொல்லும் நெகிழ்ச்சி சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

கொரோனா உதவிய பாட்டிகள் - பிரபல ஹீரோயின் நெகிழ்ச்சி | actress manjima mohan shares a emotion story of two grandma donating for fighting corona virus

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் மஞ்சிமா மோகன். சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் இவர் பிரபலமடைந்தார். இதையடுத்து சத்திரியன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த 82 வயதான மூதாட்டி சல்பா அஸ்கர் தனது பென்ஷன் பணத்தில் இருந்து 1 லட்சம் ரூபாயை கொரோனா எதிர்ப்பு நிதியாக கொடுத்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கலிதா பேகம், மெக்கா யாத்திரை செல்ல சேர்த்து வைத்திருந்த பணத்தில் 5 லட்சத்தை நிதியாக அளித்துள்ளார். இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ள மஞ்சிமா மோகன், இவர்களை ''ஹீரோக்கள்'' என புகழ்ந்துள்ளார். 

 

Entertainment sub editor