திருமணமாகி ஒரு மாதம்.. முதல்முறையாக கணவருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த ஆலியா பட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

..பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடியின் புதிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

Ranbir kapoor Alia Bhatt Latest Images Goes Viral on Instagram

பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர்.

Ranbir kapoor Alia Bhatt Latest Images Goes Viral on Instagram

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

Ranbir kapoor Alia Bhatt Latest Images Goes Viral on Instagram

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் - ஆலியாபட் ஜோடி ஒரு மாதம் முன்பு திருமணம் செய்தனர். மும்பை செம்பூரில் உள்ள ரன்பீர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய சினிமாத்துறை நண்பர்க்ள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டனர்.

திருமணம் ஆகி ஒரு மாதம் ஆவதையொட்டி ரன்பீர்-ஆலியா ஜோடி கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுத்த புகைப்படங்களை ஆலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கோர்ட் சூட்டில் ரன்பீர் கொண்டாட்டத்தில் காட்சியளிக்கிறார். கையில் மெஹந்தியுடன் ஆலியா தோன்றியுள்ளார்.

Ranbir kapoor Alia Bhatt Latest Images Goes Viral on Instagram

ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா படத்தில் நடிக்கிறார். லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir kapoor Alia Bhatt Latest Images Goes Viral on Instagram

People looking for online information on Alia Bhatt, Ranbir Kapoor will find this news story useful.