பிரபல கொரிய பாப் பாடகி மர்மமான முறையில் மரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 25, 2019 02:11 PM
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி கூ ஹாராவின் சடலம் அவர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது கே பாப் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

28 வயதான ஹாரா 2008 ஆண்டு பாப் இசை உலகில் அடியெடுத்து வைத்தார். பல நடன வீடியோக்கள், மேடை நடனங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மூலம் புகழின் உச்சியை எட்டிய அவரை இன்ஸ்டாவில் 17 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிபிசி செய்தியின் அடிப்படையில் அவர் கடந்த மே மாதம் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவர் தன் செயலுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
இறுதியாக தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் புகைப்படத்துடன் ‘குட் நைட்’ பதிவிட்டு உறங்க சென்ற ஹாரா சடலமாக மீட்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த மரணம் குறித்து விவரங்களை முழு விசாரணைக்கு பிறகே அளிக்க முடியும் என தென் கொரிய போலீசார் தெரிவித்துள்ளனர்.