www.garudabazaar.com

துணிவு படத்தில் நடிகர் பிரேம் குமார்.. வெளியான சூப்பர் கேரக்டர் லுக்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம் குமாரின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

Actor Premkumar Thunivu Character Look Poster Released

Also Read | துணிவு படத்தில் பட்டிமன்றம் மோகன சுந்தரம்.. வெளியான கேரக்டர் லுக் போஸ்டர்!  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

Actor Premkumar Thunivu Character Look Poster Released

நேர் கொண்ட பார்வை வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.  துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

Actor Premkumar Thunivu Character Look Poster Released

இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Actor Premkumar Thunivu Character Look Poster Released

இந்நிலையில் இன்று துணிவு படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் பிரேம் குமார் பிரேம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம் குமார் ஏற்கனவே விக்ரம் வேதா உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Also Read | விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'.. KGF-ல் ஷூட்டிங் குறித்து பா‌. ரஞ்சித் கொடுத்த செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Premkumar Thunivu Character Look Poster Released

People looking for online information on Ajith Kumar, Premkumar, Premkumar in Thunivu Movie, Thunivu will find this news story useful.