பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 25, 2019 04:39 PM
பிரபல நடிகர் சீயான் விக்ரமின் மகன், த்ருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.22) ரிலீசானது.

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கிரீஸய்யா இயக்கியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் த்ருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் முதல் 3 நாட்களில் ரூ.1.03 கோடி வசூல் செய்துள்ளது. அறிமுக ஹீரோவின் படத்திற்கு பாக்ஸ் ஆபீஸில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, சினிமா வட்டாரங்களில் ஆரோக்கியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் பின் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.