www.garudabazaar.com
iTechUS

இரும்பு மாதிரி இருந்த நம்ம விக்ரமனை வந்ததுமே வெட்கப்பட வச்ச DD 😍.. அப்படி என்ன சொன்னாங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Dhivya Dharshini enters into BB House fun Talks with vikraman

Also Read | எமோஷன் ஆன GP முத்து.. டக்குன்னு கமல் கேட்ட கேள்வி.. விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

Dhivya Dharshini enters into BB House fun Talks with vikraman

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருக்கின்றனர். இதனிடையே தொகுப்பாளர் DD பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசும் DD விக்ரமனிடம்,"அழகா இருக்கீங்க விக்ரமன்" எனச் சொல்கிறார். இதனை கேட்டு புன்னகைத்த விக்ரமன் நன்றி சொல்கிறார்.

அப்போது, மைனா,"விக்ரமன் பிறவி பலனையே அடைஞ்சிருப்பாரு" என கலகலப்பாக சொல்கிறார். இதனை கேட்டு அனைத்து போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். இதனிடையே, பேசிய பிக்பாஸ்,"DD வணக்கம். இந்த பிக்பாஸ் வீட்டுக்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி. ஹேப்பி பொங்கல்" எனச் சொல்ல, DDயும் பொங்கல் வாழ்த்து சொல்கிறார்.

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர்.. ஹவுஸ்மேட்சை நெகிழ வச்ச வீடியோ.. இன்றைய பிக்பாஸில்..!

தொடர்புடைய இணைப்புகள்

Dhivya Dharshini enters into BB House fun Talks with vikraman

People looking for online information on BB House, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhivya Dharshini, Vikraman will find this news story useful.