மாஸ்டர் டப்பிங்கில் கைதி டயலாக் - அர்ஜுன் தாஸ் - தீனா செம அட்ராசிட்டி.! Theri Video.
முகப்பு > சினிமா செய்திகள்மாஸ்டர் படத்தின் டப்பிங் பணியின் போது நடிகர் அர்ஜுன் தாஸ், தீனா இருவரும் செம ஃபன் செய்துள்ளனர்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்து, இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டப்பிங்கில் தீனாவும் அர்ஜுன் தாஸும் செய்த வீடியோ தற்போது வெளியானது. டப்பிங்கின் இடையில் கைதி படத்தில் பிரபலமடைந்த லைஃப் டைம் செட்டில்மென்ட் டா டயலாக்கிற்கு தீனா வாயசைக்க, பின்னால் இருந்து அர்ஜுன் தாஸ் குரல் கொடுக்கிறார். இதை பதிவிட்ட தீனா, டப் பண்ற மாதிரி, ஆனா டப் பண்ணல என பதிவிட்டுள்ளார். மாஸ்டர் குழுவின் இந்த ஜாலி வீடியோவுக்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.