ஜிகிடி கில்லாடி ! - தனுஷின் 'பட்டாஸ்' படத்துக்காக அனிருத் பாடிய ரொமான்டிக் பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 25, 2019 05:31 PM
தனுஷ் நடிப்பில் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'பட்டாஸ்'. இந்த படத்தை எதிர் நீச்சல் , கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்ஸடா, சினேகா, நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் கூட்டணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இருந்து ஜிகிடி கில்லாடி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, அனிருத் பாடியுள்ளார்.
ஜிகிடி கில்லாடி ! - தனுஷின் 'பட்டாஸ்' படத்துக்காக அனிருத் பாடிய ரொமான்டிக் பாடல் இதோ வீடியோ
Tags : Pattas, Dhanush, Anirudh Ravichander, Jigidi Killadi