’தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்துக்கு அந்த டைட்டில் இல்ல’ படக்குழு விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 18, 2019 06:43 PM
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் கேங்ஸ்டர் திரைப்படம் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் தனுஷுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் நடித்த ஜான் காஸ்மோ என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெயர் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒய் நாட் ஸ்டுடியோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தனுஷ் 40 படம் குறித்து வெளியாகும் எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் எனவும், வரும் பிப்ரவரி மாதம் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் மத்தியில் முடிவடைய உள்ளது.
#D40 title to be revealed soon.... Need your support as always 🙏 https://t.co/Rk29UqORfD
— karthik subbaraj (@karthiksubbaraj) December 18, 2019