’முரட்டு தமிழண்டா’ தனுஷ் படத்துக்கு விவேக் எழுதிய ’பட்டாஸ்’ வரிகள்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 20, 2019 02:43 PM
கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஜூலை மாதத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருந்த படக்குழு பின்னர் அவரே எழுதி பாடிய ’ச்சில் ப்ரோ…’ பாடலை வெளியிட்டது.
இந்நிலையில், நாளை காலை 11.30 மணிக்கு பட்டாஸ் பட த்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதி உள்ளார்.
முரட்டுத் தமிழண்ட அன்ற எந்த பாடலில் வரிகளை பாடலாசிரியர் விஜய் தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்:
இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழத் தொட்டது கெடையாது
மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுகப் பாத்தது கெடையாது
இந்த ஆரம்பம் புதுசு
— Vivek Lyricist (@Lyricist_Vivek) December 20, 2019
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழத் தொட்டது கெடையாது
மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுகப் பாத்தது கெடையாது #MurattuThamizhanda #PattasSecondSingleTomorrow pic.twitter.com/2DGmgTLrgQ