Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

செம்ம.. ரிலீசுக்கு முன் 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவை சந்தித்த தனுஷ்! வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீசுக்கு முன் தனுஷ் படக்குழுவினரை சந்தித்து உள்ளார்.

Dhanush with Thiruchitrambalam Team OM Prakash Mithran Jawahar

Also Read | பிரபல இளம் சினிமா பத்திரிகையாளர் கௌஷிக் LM மாரடைப்பால் மரணம்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் கேரளா உரிமத்தை பிரபல மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.‌தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

Dhanush with Thiruchitrambalam Team OM Prakash Mithran Jawahar

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Dhanush with Thiruchitrambalam Team OM Prakash Mithran Jawahar

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தின் இறுதிக் கட்ட பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று படம் ரிலீஸ்க்கு தயாராகி விட்டது என ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "All Set" என அறிவித்துள்ளார். மேலும் படக்குழுவினர் உடன் நடிகர் தனுஷ் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Om Prakash (@omdop)

Also Read | போடு..பிரபல OTT-யில் ரிலீஸாகும் அருண் விஜய் நடித்த 'யானை'.. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush with Thiruchitrambalam Team OM Prakash Mithran Jawahar

People looking for online information on Dhanush, Nithya Menen, Priya Bhavani Shankar, Rashi Khanna, Thiruchitrambalam Movie will find this news story useful.