Nenjuku Needhi

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் ‘தி கிரே மேன்’… டிவிட்டரில் சிறப்பான சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் விரைவில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது.

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

Also Read | ஜொலிக்கும் செட்.. குத்து பாட்டுக்கு ஆடிய விஷால் & S.J.சூர்யா… மார்க் ஆண்டனி BTS ஃபோட்டோ

ஹாலிவுட்டில் தனுஷ்…

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் பிரெஞ்ச் என பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.  அவர் நடிக்கும் தி கிரே மேன் திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஒரு சிஐஏ ஏஜெண்டாக கோஸ்லிங் நடித்துள்ளார். MCU படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த எவன்ஸ், இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் தி கிரே மேன் படத்தில், ரெஜ்-ஜீன் பேஜ், அனா டி அர்மாஸ், வாக்னர் மௌரா, பில்லி பாப் தோர்ன்டன் மற்றும் ஆல்ஃப்ரே வுடார்ட் ஆகியோரும் நடித்துள்ளனர். மார்க் கிரேனியின் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் $200 மில்லியன் பட்ஜெட்டில் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

தி கிரே மேன் பற்றி தனுஷ்…

சமீபத்தில் இந்த படத்தில் தனுஷின் முதல் லுக் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றது. இந்த படம் பற்றி  தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நெட்ஃபிளிக்ஸ்காக ரஸ்ஸோ பிரதர்ஸ் ('அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா: வின்டர் சோல்ஜர்') இயக்க, ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நான் சேரப் போவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அற்புதமான அதிரடி அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எனக்குக் காட்டி வரும் அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அனைவரையும் நேசிக்கிறேன். அன்பை பரப்புங்கள்… !" என தெரிவித்திருந்தார்.

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

டிவிட்ட்ரில் எமோஜி…

இந்த திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் தனி  எமோஜி டிவிட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக திரைப்படங்களுக்கென தனி எமோஜி வெளியிடுவது ட்ரண்ட் ஆகி வருகிறது. சமீபத்தைய படங்களான KGF 2 மற்றும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபாட்டா ஆகிய படங்களுக்கு எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

Also Read | மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்.. லுக் சும்மா கம்பீரமா, மிரட்டலா இருக்கே..

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush The Gray Man movie emoji activated in Twitter

People looking for online information on Dhanush, Hollywood, The Gray Man movie, The Gray Man movie emoji will find this news story useful.