Nenjuku Needhi

100 கிலோ எடையை அசால்ட்டா தூக்கிய சமந்தா.. அதுக்கப்றம் கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்டே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தா 100 கிலோ எடை தூக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

Samantha lift 100kg weight and shares a gym fitness video

Also Read | கமல் நடிக்கும் "விக்ரம்" பட பெயரில் விற்பனைக்கு வந்த PERFUME! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,  விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார்.

Samantha lift 100kg weight and shares a gym fitness video

கடந்தாண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் எடை தூக்கும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

Samantha lift 100kg weight and shares a gym fitness video

சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் ஜூனைத் ஷேக் மேற்பார்வையில் 100 கிலோ சுமோ டெட்லிஃப்ட்  எடையை சமந்தா தூக்கினார். 100 கிலோ எடையை தூக்கும் போது சமந்தா கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது.

Samantha lift 100kg weight and shares a gym fitness video

Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha lift 100kg weight and shares a gym fitness video

People looking for online information on உடற்பயிற்சி, சமந்தா, Gym workout, Samantha, Samantha gym fitness video will find this news story useful.