Nenjuku Needhi

மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்.. லுக் சும்மா கம்பீரமா, மிரட்டலா இருக்கே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்த மாரி செல்வராஜ் அடுத்ததாக 'மாமன்னன்' என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

Actor Fahadh Faasil join Maamanithan shoot

Also Read | கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் …விருமன் Team வெளியிட்ட Exciting தகவல்!

இதில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் நிலையில், அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதே போல, முதல் முறையாக மாரி செல்வராஜ் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Actor Fahadh Faasil join Maamanithan shoot

மாமன்னனாக வடிவேலு?

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மார்ச் மாதம், ஏற்காட்டில் நடைபெற்று நிறைவடைந்தது. இதற்கு அடுத்தபடியாக, சேலம் பகுதியிலும் படப்பிடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும், இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

Actor Fahadh Faasil join Maamanithan shoot

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடித்த காட்சிகள் குறித்த தகவலை பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கான நேர்காணலின் போது, நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு, மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், மாமன்னன் படத்தில் வடிவேலுவின் நடிப்பு பற்றி அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Actor Fahadh Faasil join Maamanithan shoot

படப்பிடிப்பில் இணைந்த பஹத் பாசில்

இந்நிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில், நடிகர் பஹத் பாசில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர், பூங்கொத்து கொடுத்து பஹத் பாசிலை வரவேற்றனர். மேலும், கம்பீரமான மீசையுடன் இருக்கும் பஹத் பாசில் லுக்கும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "ஜூன்-1 முதல் Shooting-க்கு உபகரணங்கள் அனுப்ப மாட்டோம்".. அவுட் டோர் யூனிட் பரபரப்பு அறிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Fahadh Faasil join Maamanithan shoot

People looking for online information on பஹத் பாசில், மாமன்னன், வடிவேலு, Fahadh Faasil, Maamanithan, Maamanithan Movie Updates, Vadivelu will find this news story useful.