Nenjuku Needhi

சிவகார்த்திகேயன் #SK20 படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம BTS போட்டோவோடு வெளியான LATEST தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி உள்ளது.

SivaKarthikeyan SK20 Shoot Currently Happening in Pondicherry now

Also Read | WOW! சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'.. BTS புகைப்படங்களுடன் வெளியான LATEST அப்டேட்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.

SivaKarthikeyan SK20 Shoot Currently Happening in Pondicherry now

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார்.

SivaKarthikeyan SK20 Shoot Currently Happening in Pondicherry now

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் பணிபுரிந்துள்ளார் மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan SK20 Shoot Currently Happening in Pondicherry now

SK 20 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் இன்னும் அறிவிக்கப்படுவதற்குள்ளே படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 100 கிலோ எடையை அசால்ட்டா தூக்கிய சமந்தா.. அதுக்கப்றம் கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்டே!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan SK20 Shoot Currently Happening in Pondicherry now

People looking for online information on Sivakarthikeyan, SK20, SK20 Movie Updates, SK20 Shoot will find this news story useful.