Nenjuku Needhi

WOW! சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி'.. BTS புகைப்படங்களுடன் வெளியான LATEST அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டது.

Samantha Vijay Devarakonda Kushi first schedule shooting wrapped up in Kashmir

Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார்.

'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ஹிஷம் அறப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

Samantha Vijay Devarakonda Kushi first schedule shooting wrapped up in Kashmir

'குஷி' தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

Samantha Vijay Devarakonda Kushi first schedule shooting wrapped up in Kashmir

இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகா படக்குழு BTS புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samantha Vijay Devarakonda Kushi first schedule shooting wrapped up in Kashmir

Also Read | 100 கிலோ எடையை அசால்ட்டா தூக்கிய சமந்தா.. அதுக்கப்றம் கொடுத்த ரியாக்சன் தான் ஹைலைட்டே!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Vijay Devarakonda Kushi first schedule shooting wrapped up in Kashmir

People looking for online information on Kushi first schedule shooting updates, Kushi Movie, Samantha, Vijay Devarakonda will find this news story useful.