www.garudabazaar.com

Vaathi : “டியூஷன் போன என் ஆள பாக்க தினமும் போவேன்.!” - தனுஷ் சொன்ன குட்டி லவ் ஸ்டோரி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தமிழ் - தெலுங்கு திரைப்படம் 'வாத்தி'.

Dhanush opens up his tution love in Vaathi audio launch

Images are subject to © copyright to their respective owners.

Also Read | “நான் சொன்னா திட்டுவாங்க.. அதே வெற்றிமாறன் Sir சொன்னா..” - இயக்குநர் மோகன்.G பரபரப்பு பேச்சு..

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு தமிழில் "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள்ளது. கல்வித்துறையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது.  இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் இந்த படத்தில் பணிபுரிகின்றனர்.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடிக்கிறார்கள். கல்வித்துறையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் டிரெய்லரில், “படிப்பு பிரசாதம் மாதிரி குடுங்க. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி கொடுக்காதீங்க” என்கிற வசனம் வரும். அந்த ஒற்றை வரிகளே கதையின் தன்மையை புரியவைக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

எனினும் இந்த படம் பிரச்சார தொனியில் இருக்காது என இப்படத்தின் இசைவிழாவில் பேசத் தொடங்கிய தனுஷ், “இந்த திரைப்படம் 90களில் நடக்கிறது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் 90களில் நான் பள்ளி படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் 90களில் நான் வாத்தியாராக இருக்கிறேன். அந்த வேலை மிகவும் ஈஸி என நினைத்தேன். ஆனால் நடிக்கும் போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என புரிந்தது. படிப்பது கஷ்டம் என்று நாம் சொல்வதை விட பாடம் எடுப்பதும், தன் பிள்ளைகள் நன்றாக படித்து ஆளாகி விட வேண்டும் என்று பெற்றோர் தவிப்பதும் அதைவிட பெரிய கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன். ” என்றார்.

மேலும் ஒரு குட்டிக்கதை சொல்லத் தொடங்கிய தனுஷ், “பள்ளி படிப்பின்போது நான் டியூஷன் போனேன். அதற்கு காரணம் நான் படிப்பதற்கு அல்ல. என்னுடைய ஆள் டியூஷன் சென்று இருந்தார். அதற்காகதான்.. ஆனால் நான் அவங்களுக்காக வெளியில் காத்திருப்பது, அவங்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் பைக்கில் சென்று ஆக்ஸிலரேட்டரை திருகி உறுமல் சத்தத்தை ஏற்படுத்துவேன். ஒருநாள் அந்த ஆசிரியர் நீங்கள் எல்லாம் படித்து விடுவீர்கள், வெளியில் நின்று பைக்கை திருகி உறுமல் சத்தத்தை எழுப்புபவன் ஒருநாள் கூத்தாடியாக தான் தெருவில் நிற்பான் என்று கூறினார். அவர் எந்த நேரத்தில் சொன்னாரோ, இன்று நான் கூத்தாடாத தெருவே தமிழ்நாட்டில் இல்லை. நான் ராஜா மாதிரி இருக்கிறேன்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் இன்றுவரை நாம் ஏன் வெளியே சுற்றிக் கொண்டிருந்தோம், நாம் ஏன் உள்ளே அமரவில்லை என்று நான் வருத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன்.‌ நான் ஏற்கனவே சொன்னதுதான்.. நம்மிடம் காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ரூபாய் இருந்தால் பிடுங்கி கொள்வார்கள், படிப்பு மட்டும் தான் நம் சொத்து எடுத்துக் கொள்ளவே முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள், அது உங்களுக்கு வாழ்க்கையாகும்” என்ன பேசினார்.

Also Read | “எனக்கு யாரும் எதிரி இல்ல.. பா.ரஞ்சித் நண்பர்தான்..!” - பகாசூரன் படவிழாவில் உடைத்த மோகன்.G

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush opens up his tution love in Vaathi audio launch

People looking for online information on Dhanush, Vaathi, Valentines Day will find this news story useful.