www.garudabazaar.com

“இவரை எப்படி ஆடவெப்பாங்க?”.. “இந்த பூனையும் பால் குடிக்குமா?”.. செல்வராகவன் பற்றி கூல் சுரேஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Cool Suresh about Selvaraghavan Bakusuran press meet

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Ayali : “மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை” - அயலி இயக்குநரை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி அளித்த பரிசு..!

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

Cool Suresh about Selvaraghavan Bakusuran press meet

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இப்பட விழாவில் பேசிய கூல் சுரேஷ்,  “இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நினைச்சேன், பால்பண்ணையே குடிக்கும் போல. செல்வராகவனை போல் கதாநாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறாரே இயக்குநர் என நினைத்தேன்.

Cool Suresh about Selvaraghavan Bakusuran press meet

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் சிவ சிவாய பாடலில் அப்படி நடித்திருந்தார். இவர் எப்படி டான்ஸ் ஆடுவார் என நினைத்தான். ஆனால் இந்த கதைக்கு இந்த மாதிரி ஒரு எமோஷனலாக நடிப்பவரால் மட்டும்தான் நடிக்க முடியும். அவ்ளோ சூப்பராக நடித்திருக்கிறீர்கள் செல்வராகவன் சார்” என சொன்னவர், “எஸ்டிஆர்னா பத்து தல.. பகாசூரன்தான் கெத்து தல” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "போதும்டி.. இதுக்குமேல என்னால முடியலடி.!!".. மகாலஷ்மிக்கு ரவீந்தரின் வைரல் லவ் லெட்டர்..!❤️

“இவரை எப்படி ஆடவெப்பாங்க?”.. “இந்த பூனையும் பால் குடிக்குமா?”.. செல்வராகவன் பற்றி கூல் சுரேஷ் வீடியோ

Cool Suresh about Selvaraghavan Bakusuran press meet

People looking for online information on Bakusuran, Cool Suresh Selvaraghavan will find this news story useful.