D40 தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் : ஷூட்டிங் முதல் ஃபர்ஸ்ட் லுக் வரை All Details!
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடித்து வரும் தனது 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு D40 என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. Ynot Studios சார்பில் சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் பிறகு மதுரையிலும் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
அண்மையில் Ynot Studios நிறுவனத்தின் 10-வது வருட நிறைவையொட்டி, அவர்கள் வெளியிட்ட போஸ்டர் வைரல் ஆனது. கையில் அருவாளுடன் தனுஷ் நிற்பது போல அது வடிமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் போஸ்டர் எப்போது வரும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், ஃபர்ஸ்ட் லுக் குறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், 'வரும் 6-ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் பனிகள் தொடங்குவதால், அதற்கான வேலைகளில் இருக்கிறோம். அதனால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, 9-ஆம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை அறிவிப்போம்' என தெரிவித்துள்ளார்.
We are preping for the last 3 days of shoot starting on the 6th. We will announce the date of the #firstlook upon completion, which is on the 9th!#10YearsOfYNOT@dhanushkraja @sash041075 @karthiksubbaraj @Music_Santhosh @chakdyn @RelianceEnt @onlynikil
— Y Not Studios (@StudiosYNot) February 1, 2020