தனுஷுடன் 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் இணையும் பட டைட்டில் இதுவா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 02, 2019 01:00 PM
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்து கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதனையடுத்து மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்துக்கு தனுஷூடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்கு தற்போது கர்ணன் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்பட வில்லை என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் இறுதி முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது. தனுஷ் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படத்தில் மெஹ்ரீன் மற்றும் சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.