Breaking : 'பேட்ட'க்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் - ஹீரோயின் யார் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 10:13 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பேட்ட'. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் திரு ஒளிப்பதிவு செய்யவருக்கிறார்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவிருக்கிறார். இவர் மலையாளத்தில் மாயாநதி உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ( ஆகஸ்ட், 2019) லண்டனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.