www.garudabazaar.com

நடிகர் அஜித்துடன் 'துணிவு' படத்தின் முதன்மை டெக்னீசியன்.. வைரலாகும் தெறி புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமாரின் 'துணிவு' படத்தில் பணிபுரியும் முதன்மை டெக்னீசியன் BTS போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Art director Milan Fernandez with Ajithkumar Viral Photos

Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷாலின் 'இடம் பொருள் ஏவல்'.. ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் டிரெய்லர்!

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

Art director Milan Fernandez with Ajithkumar Viral Photos

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Art director Milan Fernandez with Ajithkumar Viral Photos

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Art director Milan Fernandez with Ajithkumar Viral Photos

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்நிலையில் துணிவு படத்தின் கலை இயக்குனர் மிலன் பெர்ணான்டஸ் மற்றும் அவரது குழுவினர் நடிகர் அஜித் & நடிகை மஞ்சு வாரியர் உடன் எடுத்த  துணிவு படத்தின் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  மிலன், ஏற்கனவே அஜித் நடித்த பில்லா, ஏகன், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

இந்த புகைப்படங்களை மிலன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Also Read | மகனுடன் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்.. பட்டாசு வெடிக்கும் போது கொடுத்த ரியாக்ஷன் தான் செம!

தொடர்புடைய இணைப்புகள்

Art director Milan Fernandez with Ajithkumar Viral Photos

People looking for online information on Ajith Kumar, Milan Fernandez will find this news story useful.