சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ சிங்கிள் முன்கூட்டியே ரிலீசாக இது தான் காரணமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 06, 2019 12:47 PM
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
நல்லது செய்ய முகமூடி அணிந்து வரும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கிட்டபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ நவ.7ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகவுள்ள நிலையில் படக்குழு இன்று நவம்பர் 6ம் தேதி பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்
Let’s start CELEBRATIONS a day early now! 🎉 To give way to Thalaivar’s #DarbarMotionPoster & to grant your eager wishes, we’ll be releasing #MaltoKithapuleh TODAY at 5 PM! Pattaya kelappalam vaanga! #Hero #HeroSingle @Siva_Kartikeyan @Psmithran @thisisysr @LahariMusic pic.twitter.com/rmLoySvQ4U
— KJR Studios (@kjr_studios) November 6, 2019