சிரஞ்சீவி சார்ஜா இளம் வயதில் மரணம் - கர்ப்பமாக இருக்கும் மனைவி மேக்னா ராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 39 தான் ஆகிறது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Deceased Chiranjeevi Sarja and wife Meghana Raj were expecting their first child | மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இர

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்ற போது, அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் அர்ஜூனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்திருந்தார். சமீபத்தில் தான் இத்தம்பதியினர் தங்களது இரண்டாவது வருட திருமண நாளை கொண்டாடினர்.

தற்போது மேக்னா ராஜ் கர்ப்பமாக உள்ளாராம். தனது குழந்தையை பார்க்கும் முன்னரே சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது இறுதி சடங்குகள் இன்று (08/06/2020) 11 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறதாம்.

மேலும் செய்திகள்

Deceased Chiranjeevi Sarja and wife Meghana Raj were expecting their first child | மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இர

People looking for online information on Chiranjeevi Sarja, Meghna Raj will find this news story useful.