Anantham
www.garudabazaar.com

”கல்யாணம் எப்போன்னு கேட்டா …” ”லவ்வர் பேர் என்ன வீடியோவே தர்றேன்”… மஞ்சிமாவின் வைரல் post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மஞ்சிமா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். 

Actress manjima mohan shared a jolly video in instagram

Also Read |  ”இப்டிலாம் வர மாட்டேங்குதே…” .. தமிழில் ரீமேக் ஆன பிரபல உலக படம் குறித்து இளையராஜா!

தமிழில் அறிமுகம்…

மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படம்  மூலமாக தமிழில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தொடர்ந்து தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் கௌதம் கார்த்திக் உடன் இவர் இணைந்து 'தேவராட்டம்' அவர் விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துல்கர் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.

Actress manjima mohan shared a jolly video in instagram

சமீபத்தைய படங்கள்…

கடந்த ஆண்டு மஞ்சிமா நடிப்பில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் விஷ்ணு விஷாலுடன் நடித்த எஃப் ஐ ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரு படங்களும் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. இதையடுத்து அவர் நடிப்பில் அக்டோபர் 31st லேடிஸ் நைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

ரசிகர்களுடன் உரையாடல்….

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மஞ்சிமா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்க சில சுவாரஸ்யமான கேள்விகளும் அமைந்தன. அதில் ஒருவர் “உங்களை எரிச்சலடைய செய்யும் கேள்வி எது?” என்று கேட்க, அதற்கு “கண்டிப்பாக உங்கள் கல்யாணம் எப்போது எனும் கேள்விதான்” என பதிலளித்துள்ளார்.

Actress manjima mohan shared a jolly video in instagram

அதே போல மற்றொரு ரசிகர் “உங்களின் காதலர் பெயர் என்ன” என்று கேட்க, அதற்கு “பெயர் என்ன வீடியோவே தருகிறேன்” எனக் கூறி தான் வளர்க்கும் பூனையின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்படி பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை மஞ்சிமா அளிக்க அந்த கேள்வி பதில் உரையாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

”கல்யாணம் எப்போன்னு கேட்டா …” ”லவ்வர் பேர் என்ன வீடியோவே தர்றேன்”… மஞ்சிமாவின் வைரல் POST! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress manjima mohan shared a jolly video in instagram

People looking for online information on Manjima Mohan, Manjima mohan recent interview will find this news story useful.