பூனம் பாஜ்வா மேடம், நீங்களா?? 'KPY' பாலாவுக்குvசர்ப்ரைஸ் கொடுத்த நடிகை.. முழுசா மாறுன FanBoy-அ பார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலக்கப் போவது யாரு தொடங்கி, இன்று குக் வித் கோமாளி வரை, தான் கால் பதித்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தவர் KPY பாலா.

Poonam Bajwa surprise to KPY Bala in instagram

Also Read | நம்ம அரசியலுக்கு போயிருவோமா? சிவகார்த்திகேயனின் ரசிக்க வைக்கும் DON படத்தின் ஜாலி டிரெய்லர்!

சக போட்டியாளர்கள் மத்தியில், பாலா அடிக்கும் கவுண்டர்கள், மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டுமில்லாமல், தற்போது ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியில் பாலாவை வார இறுதி நாட்களில் காண, அனைவரும் ஆவலாகவும் இருந்து வருகின்றனர்.

KPY பாலா சொன்ன விஷயம்

அந்த வகையில், சமீபத்தில் ஒரு குக் வித் கோமாளி எபிசோடில், பாலா பேசி இருந்த விஷயம் ஒன்று, பெரிய அளவில் வைரலாகி இருந்தது. கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா.

Poonam Bajwa surprise to KPY Bala in instagram

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பூனம் பாஜ்வா பற்றி பேசி இருந்த பாலா, நடிகையின் மிகப் பெரிய தீவிரமான ரசிகன் என குறிப்பிட்டிருந்தார். Ultra Legends அனைவருக்கும் பூனம் பாஜ்வாவை தான் பிடிக்கும் என்றும் பாலா தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி இருந்தது.

Poonam Bajwa surprise to KPY Bala in instagram

பூனம் பாஜ்வா தான் எல்லாம்..

தொடர்ந்து, பல மீம்ஸ் வீடியோக்களும், பாலாவின் ஆடியோவை வைத்து, இணையம் முழுக்க வைரலாக தொடங்கியது. இது தொடர்பான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்த நடிகை பூனம் பாஜ்வா, பாலாவையும் அதில் டேக் செய்திருந்தார். தொடர்ந்து, "Cheers to 2.8 Million Ultra Legends" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Poonam Bajwa surprise to KPY Bala in instagram

இதனைக் கண்ட KPY பாலா, மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போக, பெரிய அளவில் குதூகலமானார். "மேடம், நீங்களா.. என்னால நம்ப முடியல. தேங்க் யூ வெரி மச் மேடம். Proud to be ultra legends. கேரளா'ல ஃபேமஸ் ஓணம். எங்களுக்கு எப்போதும் தலைவி பூனம்" என படு குஷியில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட பலரும், பாலா ஒரு வெறித்தனமான பூனம் பாஜ்வா ரசிகன் தான் என தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

பூனம் பாஜ்வா மேடம், நீங்களா?? 'KPY' பாலாவுக்குVசர்ப்ரைஸ் கொடுத்த நடிகை.. முழுசா மாறுன FANBOY-அ பார் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Poonam Bajwa surprise to KPY Bala in instagram

People looking for online information on பாலா, பூனம் பாஜ்வா, KPY Bala, Poonam Bajwa will find this news story useful.