www.garudabazaar.com
iTechUS

"நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு".. வைரலாகும் 'தங்கலான்' நடிகை பகிர்ந்த BTS Photo..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படத்தை பிரபல நடிகை வெளியிட்டுள்ளார்.

Parvathy Trivothu Shared Thangalaan Movie BTS Photo on Instagram

Images are subject to © copyright to their respective owners.

"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Parvathy Trivothu Shared Thangalaan Movie BTS Photo on Instagram

ஜனவரி மாதம் முதல் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை பார்வதி திருவொத்து BTS  செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "பல நூறு வருடங்கள் கழித்து.. அவள் என்னைக் கண்டுபிடித்தாள். அவள் என்னில் வசிக்கிறாள். அவள் தான் நான். மற்றும் நான் தான் அவள்.." என தலைப்பிட்டு பார்வதி திருவொத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Parvathy Trivothu Shared Thangalaan Movie BTS Photo on Instagram

People looking for online information on Pa Ranjith, Parvathy Trivothu, Thangalaan, Vikram will find this news story useful.