COBRA D Logo Top
www.garudabazaar.com

"ஒருநாள் நிச்சயம் தலைவர பாத்துருவோம்" - ரஜினி வீட்டு முன்பு செம Vibe-ல் CWC ஸ்ருதிகா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் மற்றும் குடும்பம் தரப்பு பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

CWC Sruthika family went rajini home wish to meet him oneday

Also Read | "இளையராஜா பாட்ட கேட்டு கண்ணீர் விட்டு அழுதுட்டேன்!" - பா.ரஞ்சித் Emotional பேச்சு.!

நகைச்சுவை கலந்த புதுமையான சமையல் நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளி ஆகிய இருவேறு கலைஞர்கள் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இருக்கின்றன. இதில் தலைமை நடுவர்களாக செப் தாமோதரன் மற்றும் செப் வெங்கடேஷ் பாத் இருவரும் இருக்க, விஜே ரக்சன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

CWC Sruthika family went rajini home wish to meet him oneday

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வெற்றிபெற்றவர் ஸ்ருதிகா. நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்ததும் 90ஸ் கிட்ஸ் பலரும் குஷி ஆகிவிட்டனர். நடிகை ஸ்ருதிகா தனக்கே உரிய பாணியில், துரு துரு மற்றும் கலகலப்பான இவரது பேச்சும் செயலும் அனைவரையும் ஈர்க்கக் கூடியது. சில வேளைகளில் இவரும் இவருடைய கணவர் அர்ஜுனும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வர். இந்த நிலையில் ஸ்ருதிகா, அவருடைய கணவர் மற்றும் மகன் மூவரும் காரில் பயணம் செல்கின்றனர். அந்த கார் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு இருக்கும் பக்கமாக செல்கிறது.

CWC Sruthika family went rajini home wish to meet him oneday

இது குறித்து பேசிக் கொண்டு இவர்கள் செல்ல, அப்போது திடீரென ஸ்ருதிகாவின் கணவர், காரை ரஜினிகாந்த் வீட்டுப் பக்கமாக விடுகிறார். அவர்கள் அங்கு இறங்கி ரஜினிகாந்த் வீட்டு முன்பாக நின்று வீடியோ எடுக்க, அப்போது ஸ்ருதிகா, தன் கணவர் அவ்வப்போது ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அவர் வீடு வரை வந்து செல்வதாகவும் ஒருநாள் நிச்சயமாக நாங்கள் தலைவரை பார்த்து விடுவோம் என்றும் ஜாலியாக பேசுகின்றனர்.

முன்னதாக இவர்கள் காரில் வரும்போது ரஜினிகாந்தின் பாடல்களை போட்டுக்கொண்டு, அதே வைபில் ரஜினி ரசிகர்களாகவே வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஸ்ருதிகா பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீங்கள் பார்த்து விடுவீர்கள்.. வாழ்த்துக்கள்.. என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | Video: "Wife டெலிவரி.. ரஜினி பட பாட்டு கம்போசிங்.. அந்த நேரத்துல.." - யுவன் பிறந்த கதை சொன்ன ராஜா

தொடர்புடைய இணைப்புகள்

CWC Sruthika family went rajini home wish to meet him oneday

People looking for online information on Cook with comali, Rajinikanth, Sruthika will find this news story useful.