CWC புகழ் Lead கேரக்டரில் நடிக்கும் ‘Mr. ZOO KEEPER’… ஷூட்டிங் இங்கயா? செம அப்டேட் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் தோன்றி வந்த நிலையில் இப்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

CWC Pugazh Mr zoo keeper movie foreign shoot update

மறைந்த நடிகர் விவேக் மனைவியின் நெகிழ்ச்சியான கோரிக்கை.. நிறைவேற்றிய தமிழக அரசு! முழு தகவல்

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான். வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது, நடக்குவர்களிடம் சண்டை இழுப்பது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் கலக்கிய அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகள்வில் பகிரப்பட்டன. இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் கால்பதித்துள்ளனர்.

CWC Pugazh Mr zoo keeper movie foreign shoot update

கதாநாயகனாக அறிமுகம்…

சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் ’வேலை’, ’என்னவளே’ மற்றும் ’ஜூனியர் சீனியர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்த படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக, சந்தானம் நடித்து வெளியாகி இருந்த 'டிக்கிலோனா' படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வரவேற்பையும் வாழ்த்துகளையும் குவித்தது.

CWC Pugazh Mr zoo keeper movie foreign shoot update

படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த இயக்குனர்

"Mr Zoo Keeper" படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கியது.  இதையடுத்து இப்போது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்க உள்ளதாக படத்தின் இயக்குனர் சுரேஷ் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் “பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணம். Mr. ZOO KEEPER படப்பிடிப்பற்கு. உங்கள் வாழ்த்துக்களுடன்” என்று அறிவித்துள்ளார். மேலும் புகழ் படப்பிடிப்பில் வரும்  மே 14 ஆம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

CWC Pugazh Mr zoo keeper movie foreign shoot update

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CWC புகழ் LEAD கேரக்டரில் நடிக்கும் ‘MR. ZOO KEEPER’… ஷூட்டிங் இங்கயா? செம அப்டேட் ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC Pugazh Mr zoo keeper movie foreign shoot update

People looking for online information on Cooku with comali, CWC, CWC pugazh, Mr zoo keeper movie, Mr zoo keeper movie foreign shoot update will find this news story useful.