RRR Others USA

"ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ.. இனிமே என்ன டாக்டர்ன்னு மட்டும் கூப்பிடுங்க.." வசூல் ராணியான மணிமேகலை...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமான ஒன்று குக் வித் கோமாளி. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

Comali manimegalai reels video as doctor viral among cwc fans

"எனக்கு கல்யாணம்!!.." யாஷிகாவின் பதிவு.. ஆனாலும் இடிக்குதே.. குழப்பத்தில் ரசிகர்கள்

சமையல் போட்டி என்ற சற்று சீரியஸான ஒரு விஷயத்தை எடுத்து, அதனை கோமாளிகளுடன் இணைந்து, மிகவும் ஃபன்னாக செய்வது தான், இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.

குக் வித் கோமாளியின் முதல் இரண்டு சீசன்கள், பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இதன் மூன்றாவது சீசனும், கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து, வார இறுதியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Comali manimegalai reels video as doctor viral among cwc fans

கோமாளிகள் தான் ஸ்பெஷல்..

புதிய போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் உள்ளே வந்தாலும், கோமாளிக்கான Craze கொஞ்சம் கூட குறைவது கிடையாது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா உள்ளிட்ட பல கோமாளிகளின் நகைச்சுவைக்கென்றே ரசிகர்கள் அதிகமுண்டு. அதே போல, போட்டியாளர்களை விட, கோமாளிகள் செய்யும் சேட்டைகளைத் தான் அதிகம் பார்வையாளர்கள் ரசித்து பார்க்கிறார்கள்.

Comali manimegalai reels video as doctor viral among cwc fans

மணிமேகலையின் சிறப்பம்சம்..

அந்த வகையில், மணிமேகலை அடிக்கும் லூட்டி, குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். விஜேவாக தனது பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை, இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஃபேவரைட்டாகவும் வலம் வருகிறார். சமையலில் தனக்கு எதுவும் தெரியாமல் இருந்தால் கூட, போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரை, தனது அசிஸ்டன்ட் ரேஞ்சுக்கு பில்டப் செய்து, பல்ப் வாங்குவது தான் மணிமேகலையின் சிறப்பம்சம்.

புதிய ரீல்ஸ் வீடியோ

மற்ற சீசன்களை விட, குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் மணிமேகலையின் ரகளை, ரொம்ப அதிகமாக உள்ளது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வார இறுதியில், படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கோமாளிகள் களமிறங்கவுள்ளதாக ப்ரோமோக்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

Comali manimegalai reels video as doctor viral among cwc fans

மணிமேகலை டாக்டரே தான்..

இதற்காக, மணிமேகலையும் டாக்டர் வசூல் ராஜா கதாபாத்திரம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டாக்டர் உடையில் இருக்கும் அவர், வசூல் ராஜா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிமேல், இவர் கோமாளி இல்லை என்றும், டாக்டர் உடைக்கு பொருத்தமான ஆளாக இருப்பதால், இனி இவர் மருத்துவர் என்றும் ஜாலியாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி... விறுவிறுப்பில் BB Ultimate.. நடந்தது என்ன??

 

தொடர்புடைய இணைப்புகள்

Comali manimegalai reels video as doctor viral among cwc fans

People looking for online information on Cooku with comali, Cooku with Comali Show, CWC3, Vijay Television will find this news story useful.