AK 61 கெட்டப்பில் நடிகர் அஜித்.. உடல் எடை குறைத்து செம்ம ஸ்மார்ட்டா இருக்காப்ல மனுசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: AK 61 படத்தின் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

AK 61 Ajith Kumar Latest Image Went Viral On Social Media

Also Read | குழந்தை பிறப்புக்கு பின் காஜல் அகர்வாலின் முதல் வைரல் போட்டோ.. கூட யார் இருக்காங்க தெரியுமா?

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 Ajith Kumar Latest Image Went Viral On Social Media

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

AK61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

AK 61 Ajith Kumar Latest Image Went Viral On Social Media

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்த்ஹிலும் AK 61 கெட்டப்பில் அஜித் காட்சியளிக்கிறார். மேலும் கனிசமாக உடல் எடையையும் குறைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

AK 61 Ajith Kumar Latest Image Went Viral On Social Media

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

AK 61 கெட்டப்பில் நடிகர் அஜித்.. உடல் எடை குறைத்து செம்ம ஸ்மார்ட்டா இருக்காப்ல மனுசன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Ajith Kumar Latest Image Went Viral On Social Media

People looking for online information on Ajith Kumar Latest Image, Ajithkumar, AK 61 will find this news story useful.