"அந்த சம்பவத்தால தான் சில்க் செத்துட்டா" - பின்னணியை உடைக்கும் "நிஜக்குரல்" ஹேமமாலினி Exclusive..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் டப்பிங் கலைஞரான ஹேமமாலினி.
சில்க் ஸ்மிதா
இந்திய சினிமா ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்த சில்க் ஸ்மிதா 1960-ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திராவில் பிறந்தார். இவரது பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கரூர் என்பதால் பல இடங்களில் தன்னை தமிழச்சி என்றே அடையாளப்படுத்திக்கொண்டார் சில்க். நடிகர் வினுசக்கரவர்த்தியின் ’வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகமான சில்க் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய உயரத்திற்கு சென்றவர்.
தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த சில்க் ஸ்மிதாவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
புகழின் உச்சம்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை குறித்து Behindwoods குழுவிடம் பேசிய பிரபல டப்பிங் கலைஞரான ஹேமமாலினி பல்வேறு அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை தெரிவித்தார். பல்வேறு மொழிகளில் கொடிகட்டிப் பறந்த சில்க் ஸ்மிதா சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தான் கடைசியாக வாழ்ந்ததாக மாலினி குறிப்பிட்டார். இதுகுறித்து பேசிய அவர் "பிற நடிகைகளைப்போல சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணம் சில்க் ஸ்மிதாவிற்கு இருக்கவில்லை" என்றார்.
இறுதி நாட்கள்
தனது இறுதி நாட்கள் வரையில் திரைத்துறையை விட்டு அகலாத சில்க், தற்கொலையும் செய்யவில்லை அவர் கொலை செய்யப்படவும் இல்லை என்றார் மாலினி. இத்தனை புகழின் படிகளில் ஏறிச்சென்ற சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டது ஏன்? எனக் கேட்டபோது பதிலளித்த மாலினி," சில்க் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்படவும் இல்லை. அது ஒரு விபத்து" என்றார்.
இறப்பிற்கு பிறகு சில்க் ஸ்மிதாவின் சடலத்தை பார்க்க கூட பலரும் செல்ல அச்சப்பட்டதாக கூறிய மாலினி," இறப்பிற்கு சென்றால் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவோம் என்ற பயத்தினால் பலரும் அவருடைய சடலத்தை பார்க்கக்கூட செல்லவில்லை. ஊரில் இருந்து அவரது அம்மா மட்டும் வந்தார். உடனடியாக அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டது" என்றார்.
சில்க் இறந்து 26 வருடங்கள் ஆகிவிட்டாலும் மக்கள் தொடர்ந்து அவர்பற்றியே பேசிவருகின்றனர். அதற்கு காரணம் இன்னும் அவர் மக்களின் மனதில் இருப்பதுதான் என்கிறார் மாலினி. அதை தொடர்ந்து தற்போது சில்க் இருந்திருந்தால் அவர் எப்படி பேசியிருப்பார் எனக் கேட்டபோது சில்க்கின் குரலில் மாலினி பேசியது உருக்கமாக அமைந்தது.
சில்க் வாழ்ந்த போது எந்தவித சொத்துக்ளையும் வாங்கவில்லை எனவும் அந்த அளவிற்கு சில்கிற்கு டேலண்ட் இல்லை எனவும் மாலினி குறிப்பிட்டார். முழு பேட்டியையும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Silk Smitha Style Speech Viral Dance Throwback Video
- Popular Director Who Introduced Silk Smitha As Heroine, Passes Away Ft Antony Eastman
- Popular Actress Video Announcement About Silk Smitha Biopic Tamil And Telugu Ft Sri Reddy Viral Pics
- Silk Smitha Biopic Is Here And Guess Who Leading Lady
- சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது | Actress Silk Smitha's Biopic To Be Made As Aval Appadithan In Tamil
- Intresting Details About Late Actress Silk Smitha | மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து சுவாரஸிய தகவல்கள்
- Silk Smitha Lookalike Girl Video Goes Viral On Tiktok
- மறுபிறவி எடுத்தாரா சில்க் ஸ்மிதா கேரளாவில் வைரலாகும் பெண் வீடியோpopular Actress Silk Smith Look Alike Girl Video Goes Viral In Tiktok
- Director Pa Ranjith To Produce A Web Series On Silk Smitha
- Remembering Silk Smitha On Her 21st Death Anniversary
- Suriya's 24 Selected For 3rd Road Silk Film Festival
- From Silk Smitha To MS Subbulakshmi, MS Subbulakshmi, Vidya Balan