ரெய்னா வீட்டில் விசேஷம்.. மிக எளிமையாக கொண்டாடப்பட்டது... போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சி..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது இது தோன்றி இருக்கும். எல்லாம் சரியாக இருந்திருந்தால் இந்நேரம் "CSK CSK CSK" என்று டிவி முன்பு கத்திக் கொண்டிருப்போம். இந்த வருடம் ஐபிஎல் மேட்ச்களை பார்க்க முடியவில்லை என்று ஏக்கம் பலருக்கும் இதயத்தின் ஒரு ஓரத்திலாவது இருக்க தான் செய்கிறது.
சிஎஸ்கே அணியின் ஸ்டார் பிலேயர் சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேசியாவின் பிறந்த நாள் இன்று மிக எளிமையான முறையில் வீட்டிலேயே கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படத்தை ரெய்னா மகிழ்ச்சியுடன் வெளியிட்டு உருக்கமான வாழ்த்து சொல்லியிருக்கிறார்.. ரசிகர்கள் பலரும் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ரெய்னாவுக்கு சமீபத்தில்தான் ஆண் குழந்தை பிறந்தது குழந்தையின் முகத்தை இதுவரை காட்டாத தம்பதியினர் இந்த புகைப்படத்தில் குழ்தையை காட்டியுள்ளனர். மிக ஸ்பெஷலான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது